1. Home
  2. தமிழ்நாடு

நெல்லை, செங்கல்பட்டு எஸ்.பி.க்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு மீண்டும் நடவடிக்கை

நெல்லை, செங்கல்பட்டு எஸ்.பி.க்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு மீண்டும் நடவடிக்கை


தமிழகத்தில் 5 காவல்துறை உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இது பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பு பெற்றது. எனினும் அனைத்து அதிகாரிகளையும் மாற்றக்கூடாது என குரல் எழுந்தது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் 5 காவல்துறை உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையர் ஐ.ஈஸ்வர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை புளியந்தோப்பு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை, செங்கல்பட்டு எஸ்.பி.க்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு மீண்டும் நடவடிக்கை

சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்த எஸ்.ஆறுமுகசாமி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த என்.மணிவண்ணன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார் சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.அரவிந்தன் செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like