கொரோனா வார்டாக மாறும் நேரு உள் விளையாட்டு அரங்கம்!

 | 

நேரு உள் விளையாட்டு அரங்கம் 600 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 15,512 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 9,989 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றியது தமிழக அரசு, தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கை கொரோனா வார்டாக மாற்ற உத்தரவிட்டுள்ளது. இப்போது அதிக அளவிலான நபர்களுக்கு சென்னையில் கொரோனா தொற்று ஏற்படுவதால் முதல்நிலை பாசிட்டிவ் உள்ளவர்கள் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP