நீட் யுஜி ஹால் டிக்கெட் வெளியானது! டவுன்லோடு செய்வது எப்படி?

நீட் யுஜி தேர்வு, நடப்பாண்டில் மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இதற்கான ஹால் டிக்கெட்டை https://neet.ntaonline.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இதன்படி, விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை அளித்து, தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. வருகிற ஐந்தாம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் யூஜி தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
www.exams.nta.ac.in -என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://neet.ntaonline.in/frontend/web/admitcard/index என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
அதன்பிறகு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுத இருக்கும் மையம், விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் உள்ளிட்டவை அதில் இடம் பெற்று இருக்கும். நாடு முழுவதும் 571 நகரங்களிலும் இந்தியாவிற்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.