1. Home
  2. தமிழ்நாடு

இன்று நீட் தேர்வு.. மாணவர்களே மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீங்க..!

1

தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மே 5-ம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறயுள்ளது. இதற்கான அனுமதி அட்டைகள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியுடன் இணையதளத்தில் லாகின் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதாவது மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குள் வந்து விட வேண்டும் என்றும், அதற்குமேல் வரும் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என NTA அறிவுறுத்தியுள்ளது. நாளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான (ட்ரெஸ் கோட்) ஆடை கட்டுப்பாடும் என்டிஏ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 இந்தியா முழுவதும் இன்று 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தவர்களில் 95% மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துள்ளனர்.

தேர்வை எழுதும் மாணவர்கள் மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும். அனைத்து மாணவர்களும் கடுமையான சோதனைகளுக்கு பிறகு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பெண் மாணவர்களை பெண் பணியாளர்கள் மூடப்பட்ட அறைகளில் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தேர்வின் முதல் ஒரு மணி நேரத்திலும் கடைசி அரை மணி நேரத்திலும் பயோ பிரேக் எதுவும் அனுமதிக்கப்படவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

நீட் தேர்வர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விஷயங்கள்:

மாணவர்கள் நீண்ட கைகளுடன் கூடிய ஆடைகள் அணியக்கூடாது. அரைக்கை சட்டை அணிந்து செல்ல வேண்டும்.

ஹீல்ஸ் இல்லாத செருப்புகள் மற்றும் ஷூக்கள் மட்டுமே அணிந்து செல்ல வேண்டும்

பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட், தொப்பி போன்ற பொருட்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை

கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள், மற்றும் உலோக பொருட்களும் முற்றிலும் தடை

மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி கிடையாது

தெளிவாக தெரியும் வகையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லலாம்

எவையெல்லாம் எடுத்து செல்லலாம்:

நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு

தேர்வு மைய விவரங்கள்

பயோடேட்டா

உறுதிமொழி படிவம்

அஞ்சலட்டை அளவு புகைப்படம்

புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்

Trending News

Latest News

You May Like