1. Home
  2. தமிழ்நாடு

வெகு விமர்சையாக முடிந்த 'தங்கமகன்' நீரஜ் சோப்ரா திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்..!

Q

இந்திய இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனால், பிரபலம் அடைந்த நீரஜ் சோப்ரா, 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார்.

இந்நிலையில், சத்தமே இல்லாமல், நீரஜ் சோப்ரா தனது திருமணத்தை முடித்துள்ளார். ஹிமானி மோர் எனும் டென்னிஸ் வீராங்கனையை அவர் கரம் பிடித்துள்ளார். இவர் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மேலும் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர டென்னிஸ் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

திருமணம் குறித்த எந்த தகவலையும் நீரஜ் சோப்ரா வெளியிடாத நிலையில், தற்போது திருமண போட்டோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். . ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like