1. Home
  2. தமிழ்நாடு

நாளை ஓடிடி-யில் வெளியாகிறது NEEK திரைப்படம்..!

Q

இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்ட படம்  'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. 

இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடல் மட்டும் அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 21-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Q

Trending News

Latest News

You May Like