“மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து” : காங்கிரஸ் அதிரடி!
“மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து” : காங்கிரஸ் அதிரடி!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நீட் அச்சம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் நான்கு மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். எல்லாம் இந்த நீட் எனும் அரக்கனால் தான்.
இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கேட்பதாக இல்லை,
அனைவரும் ஒன்றிணைந்து நீட்டை எதிர்க்க வேண்டும் என நடிகர் சூர்யா கூறியுள்ளார். நீட் தேர்வு தொடர்ந்தால் தமிழகத்தில் தற்கொலையும் தொடரும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். ராகுல் காந்தி பிரதமராகி அவரது தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்’நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
newstm.in