3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப்பதிவு..!

3-ம் கட்ட வாக்குப் பதிவு நேற்று 13 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்கள் வருமாறு.,
பிகாரில் 56.55 சதவிகித வாக்குப் பதிவு, சத்தீஸ்கரில் 66.94 சதவிகித வாக்குப் பதிவு, கோவாவில் 74 சதவிகித வாக்குப் பதிவு, குஜராத்தில் 56.21 சதவிகித வாக்குப் பதிவு, - கர்நாடகத்தில் 66.80 சதவிகித வாக்குப் பதிவு, மத்திய பிரதேசத்தில் 62.79 சதவிகித வாக்குப் பதிவு, உத்தரப் பிரதேசத்தில் 57.04 சதவிகித வாக்குப் பதிவு, மேற்கு வங்கத்தில் 73.93 சதவிகித வாக்குப் பதிவு, யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் 65.23 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.