டெஸ்ட் படத்தில் இருந்து நயன்தாராவின் டீசர் வெளியீடு..!
'விக்ரம் வேதா', 'இறுதி சுற்று', 'ஜகமே தந்திரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த், ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் மற்றும் நயன்தாரா பிரதான பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற ஏப். 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
இந்த நிலையில், நேற்று சித்திராத்தின் புரோமோ வெளியானது. தற்போது, நயன்தாராவின் புரோமோ வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.