1. Home
  2. தமிழ்நாடு

கல்யாணத்திற்கு கண்டிஷன் போட்ட நயன்தாரா ..!

கல்யாணத்திற்கு கண்டிஷன் போட்ட நயன்தாரா ..!


லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா
2005ல் ஐயா திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் கால் பதித்தார். எண்ணற்ற படங்களில் தொடர்ந்து நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாராவுக்கு காதல் புதிதல்ல.

வல்லவன் திரைப்படத்தில் நடிக்கும் போது சிம்புவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், அது பலவித சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகி அந்த காதல் முறிந்தது. அடுத்து வில்லு படத்தில் நடிக்கும்போது இயக்குனர் மற்றும் நடிகர் பிரபு தேவாவுடன் காதல் ஏற்பட்டது.

பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து அவர்களுக்கென்று ஜீவனாம்சம் என்று தனது சொத்துக்களை எழுதி வைத்தார் பிரபு தேவா. ஆனாலும், பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இருவருமே பிரிந்துவிட்டார்கள். அடுத்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா மூன்றாவது முறையாக விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டார். காதல் கொண்ட நேரமோ என்னவோ நயன்தாராவுக்கு மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் திருமணத்தை தள்ளிப்போட்ட நயன்தாரா இப்போது புதிய முடிவு எடுத்திருக்கிறார். என்னவென்றால் எப்போது அவர் தேசிய விருது வாங்குகிறாரோ அதன் பின்னரே திருமணம் என்று ஒரு லட்சிய முடிவை எடுத்திருக்கிறார் நயன்தாரா.

இதனைக் கேட்டு காதலர் விக்னேஷ் சிவன் அதிர்ந்து போயிருக்கிறார். இந்நிலையில், நயன்தார திருமணத்தை தள்ளிப் போட்டார் என்றால் அந்தக் காதலரோடு இணையவே மாட்டார் என்று சினிமா வட்டாரங்கள் பீதியைக் கிளப்பி விட விக்னேஷ் சிவன் பயத்தில் உறைந்து போயிருக்கிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like