1. Home
  2. தமிழ்நாடு

விரதம் இருக்கும் நயன்தாரா..!

Q

நயன்தாரா நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார். இப்படத்தை சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இப்படத்தின் பூஜைக்கே பிரம்மாண்ட கோவில் செட் அப் போடப்பட்டு இருந்தது.

மூக்குத்தி அம்மன் படத்திற்கு பலமே நயன்தாரா தான். முதல் பாகம் எடுத்தபோதே அப்படத்திற்காக விரதம் இருந்து நடித்துக் கொடுத்தார். அதேபோல் அதன் இரண்டாம் பாகம் பூஜை போடும் ஒரு வாரத்திற்கு முன்னரே தன்னுடைய குழந்தைகளுடன் விரதத்தை தொடங்கிவிட்டார் நயன்தாரா என ஐசரி கணேஷ் கூறினார். சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ள முதல் படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே எகிற தொடங்கி உள்ளது.

Trending News

Latest News

You May Like