1. Home
  2. தமிழ்நாடு

நயன்தாரா - மாதவன் நடிக்கும் "டெஸ்ட்" படம் நேரடியாக ஓடிடி ரிலீஸ்..!

Q

டெஸ்ட் படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்கின்றனர். சமீபகாலமாக எந்த ஓடிடி நிறுவனமும் திரைப்படங்களை நேரடி ரிலீஸ் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது 'டெஸ்ட்' திரைப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளிவருகிறது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் சசிகாந்த இந்த படத்தை தயாரிக்கிறார். மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சசிகாந்த் தயாரித்த 'ஜகமே தந்திரம்' படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நயன்தாரா நடிக்கும் "டெஸ்ட்" படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like