1. Home
  2. தமிழ்நாடு

நயன்தாரா - தனுஷ் மோதல்..! தனுஷ் வழக்கறிஞர் கூறுவது என்ன?

1

நயன்தாரா வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் அவரது பிறந்தநாளான நவம்பர் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இந்த ஆவணப்பட டிரெய்லரில் நானும் ரௌடி தான் படத்திலிருந்து சில காட்சிகள் 3 விநாடிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து தனுஷ் தரப்பில் 10 கோடி கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் செயல் தனக்கும், தனது கணவருக்கும் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் தனுஷின் நோட்டிஸை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் தனுஷ் தரப்பு வழக்கறிஞர் அருண் கூறியதாவது,  “நயன்தாரா அறிக்கை தொடர்பாக எந்தவித விளக்கமாக இருந்தாலும் ’வுண்டர்பார் நிறுவனம்’ தான் முறையாக அளிப்பார்கள். எங்களால் எதுவும் கூற முடியாது” என கூறியுள்ளார். இந்த நயன்தாரா, தனுஷ் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like