இன்று நவராத்திரி கொண்டாட்டம் ஆரம்பம்..! கொலு வைக்க உகந்த தேதி, நேரம் எப்போது?
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து, தினம் ஒரு நைவேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கம்.
நவராத்திரி எப்போது?
இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 3- ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி அல்லது தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
கொலு வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி கொலுவை அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ல் துவங்கி, அதிகபட்சமாக 11 வரை கொலு படிகள் அடுக்கலாம். முடிந்த வரை மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை அடுக்கி, கொலு வைப்பது சிறப்பு.
அக்டோபர் 02 - காலை 9 முதல் 11 வரை
பூஜை நேரம் - மாலை 6 மணிக்கு மேல்
அக்டோபர் 03 - காலை 8 முதல் 9 வரை
பூஜை நேரம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
தினமும் மாலை 6 மணிக்கு பிறகு நவராத்திரி பூஜையை செய்வது சிறப்பானதாகும்.