நவராத்திரி மற்றும் தீபாவளி விற்பனைக் கண்காட்சி..!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நவராத்திரி மற்றும் தீபாவளி விற்பனைக் கண்காட்சி நடைபெறவுள்ளது. வரும் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 06ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் விற்பனைக்கு வருகிறது. சிறுதானியங்கள் முதல் நவராத்திரி கொலு பொம்மைகள் வரை விற்பனை செய்யப்படும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும்.