6 மணி நேரம் தாமதமாக புறப்படும் நவஜீவன் விரைவுரயில்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் செல்லக்கூடிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாக புறப்பட்டு, விஜயவாடா வழியாக அகமதாபாத் சென்றடையும்.
இந்நிலையில் கவரப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் எ ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் மேலும் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இன்று மாலை 4 மணி அளவில் அதாவது 6 மணி நேரம் தாமதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.