1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு - பொதுமக்களுக்கு அனுமதி..!

1

சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் அக்டோபர் 24- ஆம் தேதி வரை நவராத்திரி கொலுக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கவுள்ளார். தினமும் மாலை 04.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும் நவராத்திரி கொலுக் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள், உரிய ஆவணத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் முன் வர வேண்டும். மேலும், வெளிநாட்டு பிரஜைகளும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம்; அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாள சான்றாகக் கருதப்படும். நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் செல்போன் மற்றும் புகைப்படக் கருவிகள் அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like