இளநரையை போக்க இயற்கை மருத்துவம்..!

இளநரையை போக்க இயற்கை மருத்துவம்..!

இளநரையை போக்க இயற்கை மருத்துவம்..!
X

இன்றைய காலகட்டத்தில் எராளமானோருக்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கிறது. முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இளநரை எனும் இதற்கு கீழ்க்கண்ட எண்ணெய்யை தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்

நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து, அனைத்தையும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.

இந்த எண்ணெய்யை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரியக் கதிர்கள் பட்டு அந்த பொருட்களின் சாறு எண்ணெய்யில் இறங்கும். பின்பு, ஒரு வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். இந்த எண்ணெய்யை குளிக்கும் முன் தலையில் தேய்த்து வந்தால் நரை குறையும். செம்பட்டை முடி கருமையாகும்.

செம்பருத்தி பூ, அவுரி விதை, காயவைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நரை முடிக்கு தேவையான அளவு அந்தக் கலவையை தண்ணீரில் கலந்து ஒரு இரும்பு பாத்திரத்தில் நான்கு மணி நேரங்கள் வைக்கவும். வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்கும். வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து முடிக்கு தடவுவது நரை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். இந்த கலவை தலைமுடியில் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி தலைமுடியை கருமை நிறத்தில் மாற்றிவிடும்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை தரும். இதை தேவையான அளவு எடுத்து, சம அளவு மருதாணி பொடி அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால், முடி கருமை நிறத்தில் மாறும்.

Next Story
Share it