1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் தேசிய பென்சன் திட்டத்தின் விதிமுறை முக்கிய மாற்றம்..!

1

தேசிய பென்சன் திட்டம் என்பது இந்திய அரசின் திட்டமாகும். இது பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்படுகிறது. 

இந்நிலையில் பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) வெளியிட்டுள்ள உத்தரவின் படி, இனி தேசிய பென்சன் திட்டக் கணக்கில் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது. இந்தத் தொகையில் பணியாளர் மற்றும் முதலாளி (நிறுவனம்) ஆகிய இருவரின் பணமும் அடங்கும். முதலீட்டுக் காலத்தில் மூன்று முறை மட்டுமே கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தை திரும்பப் பெற முடியும்.

25 சதவீத தொகையை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேசிய பென்சன் திட்டக் கணக்கிலிருந்து எடுக்கலாம். இதற்கு நீங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு வாங்குதல், மருத்துவ சிகிச்சை, ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்குதல் அல்லது ஏதேனும் அவசரச் செலவுக்காக தேசிய பென்சன் திட்டக் கணக்கில் இருந்து 25 சதவீதம் வரை பணத்தை நீங்கள் எடுக்கலாம்.

தேசிய பென்சன் திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்க மத்திய பதிவுசெய்தல் முகமையின் பிரதிநிதியான அரசாங்க நோடல் அதிகாரி மூலம் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். இதில், நீங்கள் எந்த காரணத்திற்காக பணத்தை எடுக்க விரும்புகிறீர்கள் மற்றும் பிற தகவல்களைக் கொடுக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவர் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவரது குடும்ப உறுப்பினர் அல்லது நாமினி கோரிக்கை எழுப்பலாம்.

Trending News

Latest News

You May Like