அரை கம்பத்தில் தேசிய கொடி! குவைத் மன்னா் மறைவுக்காக 1 நாள் துக்கம்!

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குவைத் மன்னா் சேஷ் ஷபா அல் அகமத் அல் ஜபார் அல் ஷபா செப்டம்பர் 29ம் தேதி உயிரிழந்தார்.
குவைத் மன்னா் மறைவுக்கு அஞ்சலியும், இரங்கலும் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அக்டோபர்4ம் தேதி இன்று ஒரு நாள் மட்டும் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி மாநில அரசு அலுவலகக் கட்டடங்களில் உள்ள தேசியக் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தலைமை செயலர் உறுதி செய்துள்ளார்.