1. Home
  2. தமிழ்நாடு

மன்மோகன் சிங் உடல் மீது தேசியக்கொடி போர்த்தி மரியாதை..!

1

முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (டிச.26) முன்தினம் இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், உடல்நிலையில் பின்னேற்றம் ஏற்பட்டு, அன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று, மறைந்த மன்மோகன் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.


மேலும், காங்கிரஸின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய அரசும் அவரது மறைவுக்காக ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களும் மன்மோகன் சிங் மறைவுக்கு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று (டிச.28) மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. மன்மோகன் சிங் உடலுக்கு முப்படை அதிகாரிகள் மரியாதை.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் மீது தேசியக்கொடி போர்த்தி மரியாதை


 


 

Trending News

Latest News

You May Like