1. Home
  2. தமிழ்நாடு

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி - சிறந்த நடிகை நித்யா மேனன்..!

1

தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி திரை பிரபலங்களுக்குமே விருதுகள் என்பது ரொம்பவே முக்கியமானது தான். ஏனெனில் அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாகவே அது கருதப்படுகிறது. அந்த வகையில் தேசிய விருதுகள் மீது திரை பிரபலங்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும்.

அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.  அதில், சிறந்த தமிழ் திரைப்படமாக மணி ரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பின்னணி இசைக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்துக்காக வென்று இருக்கிறார். 

சிறந்த ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பொன்னியின் செல்வன் படத்திற்காக விருதை வென்று இருக்கிறார். தமிழில் அதிக விருதுகளை பொன்னியின் செல்வன் படம் குவித்துள்ளது.

சிறந்த திரைப்பட புத்தகமாக கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த கன்னட திரைப்படமாக கே.ஜி.எப் 2 படமும், சிறந்த மலையாள திரைப்படமாக சவுதி வெள்ளைக்காவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா2, சிறந்த இந்தி திரைப்படமாக குல்மோகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகராக காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது போல சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக காந்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது.  சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022-ம் ஆண்டிற்கான சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் பெறுகின்றனர். 

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானி மாஸ்டர், சதிஷ் கிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  கே.ஜி.எப். -2 படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அன்பறிவ் சகோதரர்களுக்கு அறிவித்துள்ளனர். கே.ஜி.எப்.- 1 படத்திற்கும் இவர்கள் தேசிய விருது வென்றிருந்தனர்.

2022-ம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பாம்பே ஜெயஸ்ரீ பெறுகிறார். மலையாளத்தின் வெளியான சவுதி வெல்லக்கா படத்தின் பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீக்கு அங்கீகாரம் கிடைத்தது. பிரம்மாஸ்திரா- 1 படத்துக்காக கேசரியா பாடலை பாடிய பின்னணி பாடகர் அர்ஜித் சிங்குக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படமாக, மலையாள படமான ஆட்டம் படம் தேர்வாகியுள்ளது. சமூகம், சுற்றுச்சூழல் மதிப்புகளை விளக்கும் சிறந்த படமாக, குஜராத்தி படமான கட்ச் எக்ஸ்பிரஸ் படம் தேர்வாகியுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு படமாக, கன்னட படமான காந்தாரா தேர்வாகியுள்ளது. சிறந்த இயக்குநராக, இந்தி படமான உஞ்சை படத்தின் சூரஜ் ஆர். பர்ஜத்யா தேர்வாகியுள்ளார். சிறந்த புதுமுக இயக்குநராக, ஹரியாண்வி மொழி படமான ஃபௌஜா படத்தின் பிரமோத் குமார் தேர்வாகியுள்ளார்.

சிறந்த துணை நடிகையாக, இந்தி படமான உஞ்சை படத்தின் நீனா குப்தா தேர்வாகியுள்ளார். சிறந்த துணை நடிகராக, ஹரியாணா படமான ஃபௌஜா படத்தின் பவன் ராஜ் மல்ஹோத்ரா தேர்வாகியுள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரமாக, மலையாள படமான மாளிகாபுரம் படத்தின் ஸ்ரீபத் தேர்வாகியுள்ளார். சிறந்த திரைக்கதைக்காக, மலையாள படமான ஆட்டம் படத்தின் ஆனந்த் ஏகார்ஷி தேர்வாகியுள்ளார். சிறந்த வசனத்துக்காக, இந்தி படமான குல்மோஹர் படத்தின் அர்பிதா முகர்ஜி, ராகுல் வி சிதெல்லா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். சிறந்த சண்டைக் கலைக்காக, கன்னட படமான கேஜிஎஃப் - சாப்டர் 2 படத்தின் சண்டைக் கலை இயக்குநர் அன்பறிவ் தேசிய விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த நடனத்திற்காக, தமிழ் படமான திருச்சிற்றம்பலம் படத்தின் `மேகம் கருக்காதா’ பாடலுக்காக நடன இயக்குநர்கள் ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பாடலாசிரியராக, ஹரியாண்வி படமான ஃபௌஜா படத்தின் நௌசத் சதார் கான் தேர்வாகியுள்ளார். சிறந்த பின்னணி பாடகராக பெண்கள் பிரிவில், மலையாள படமான சௌதி வெல்லக்கா சிசி.225/2009 படத்தின் பாம்பே ஜெயஸ்ரீ தேர்வாகியுள்ளார். சிறந்த பின்னணி பாடகராக ஆண்கள் பிரிவில், இந்தி படமான பிரம்மாஸ்திரா படத்தின் அர்ஜித் சிங்குக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த இசைக்காக, இந்தி படமான பிரம்மாஸ்திரா படத்தின் இசையமைப்பாளர் பிரிதம் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த பின்னணி இசைக்காக, தமிழ் படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசை வடிவமைப்பாளருக்காக, தமிழ் படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசை வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளராக, தமிழ் படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தேசிய விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த ஒப்பனைக்காக, வங்கமொழி படமான அபராஜிதோ படத்தின் ஒப்பனைக் கலைஞர் சோம்நாத் குண்டுவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பாளராக, குஜராத்தி படமான குட்ச் எக்ஸ்பிரஸ் படத்தின் நிகி ஜோஷி தேர்வாகியுள்ளார். சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக, வங்கமொழி படமான அபராஜிதோ படத்தின் வடிவமைப்பாளர் ஆனந்தா அதியா தேர்வாகியுள்ளார். சிறந்த படத் தொகுப்பாளராக, மலையாள படமான ஆட்டம் படத்தின் தொகுப்பாளர் மகேஷ் புவனேந்த் தேர்வாகியுள்ளார்.

Trending News

Latest News

You May Like

News Hub