எந்த மொழியையும் யார் மீதும் தேசிய கல்விக் கொள்கை திணிக்கவில்லை - அமைச்சர் தர்மேந்திர பிரதான்..!

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு ஹிந்தியை தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதாக, தமிழக அரசு புகார் கூறி வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* எந்த மொழியையும் யார் மீதும் தேசிய கல்விக் கொள்கை திணிக்கவில்லை. ஹிந்தியை திணிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் கிடையாது.
* தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதாக பொறுப்புள்ள அரசு பதவிகளில் இருப்பவர்களே தவறான தகவல் பரப்பக்கூடாது.
* இதுவரை இல்லாத வகையில் மாணவர்கள் 8ம் வகுப்பு வரை, தாய்மொழியிலேயே கற்பதற்கு தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
*இன்னும் பத்து முதல் 15 வருடங்களில், இந்த உலகத்தில் போட்டி எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அதை மாணவர்கள் சமாளிக்கும் வகையில் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.
* தேசிய கல்வி கொள்கை, மொழி சுதந்திரத்தை நிலைநிறுத்துகிறது. மாணவர்கள் விரும்பும் மொழியில் தொடர்ந்து கற்பதை உறுதி செய்கிறது.
* தமிழ் என்பது ஒரு மாநில அடையாளம் மட்டுமல்ல, ஒரு தேசிய பொக்கிஷம் என்பதை தேசிய கல்வி கொள்கை உறுதிப்படுத்துகிறது.
* பா.ஜ., ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தியுள்ளன.
* இந்தக் கொள்கையானது, கல்வித்தளத்தை விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டது; குறுக்குவதை அல்ல.
* மாணவர் நலனுக்கான இந்த கொள்கையை தமிழகம் நிராகரிப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது.