திருவள்ளூர் அருகே ரயில் விபத்து - சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படைகள்!
மைசூர் - தர்பங்கா பாக்மதி வாராந்திர எக்ஸ்பிரஸ் (12578) கர்நாடாகாவிலிருந்து தமிழ்நாடு வந்து ஆந்திரா நோக்கி செல்லும். ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்லும் இந்த ரயில் கவரப்பேட்டை அருகே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
பொன்னேரிக்கும் கவரப்பேட்டைக்கும் இடையே இரவு 8.27க்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்னால் வந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் மோதியது.
ரயில் எஞ்சினில் இருந்து 6 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் சிலருக்கு காயமடைந்துள்ளனர்.
தெற்கு ரயில்வே மற்றும் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். ஆம்புலன்ஸ்கள், மீட்பு படை வாகனங்கள் தகவல் பெறப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ரயில் விபத்து மீட்பு பணிகளுக்கு சென்னை மற்றும் அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட இரு தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைந்தனர்.