1. Home
  2. தமிழ்நாடு

பீதியை கிளப்பிய நாசா.. பூமியயை தாக்க வரும் சிறிய கோள்..!

1

அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், பூமியை தாக்க உள்ள சிறுகோள் குறித்த தகவல் மற்றும் அந்த கோள் எந்த தேதியில் பூமியை தாக்கும் என்பது குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.

அதன்படி இதுவரை கண்டறியப்படாத சிறுகோள் ஒன்று தோராயமாக 14 ஆண்டுகளில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 72% உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்லியமாக கூற வேண்டுமானால் ஜூலை 12, 2038 அன்று அந்த சிறுகோள் பூமியை தாக்குவதற்கு 72% வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த சிறுகோளின் அளவு, கலவை மற்றும் நீண்ட காலப் பாதையை துல்லியமாக தீர்மானிக்க இப்போது மேற்கொண்ட இந்த கண்காணிப்பு போதுமானதாக இல்லை என்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிறுகோள்-பாதிப்பு பேரிடர் மேலாண்மை திட்டங்கள் தற்போது வரையறுக்கப்படவில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.


 

Trending News

Latest News

You May Like