1. Home
  2. தமிழ்நாடு

இது மனித குலத்தின் சாதனைகளில் புதிய மைல்கல் - நாசா..!

1

பூமியில் இருந்து 402 கி.மீ., தூரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா நாட்டு விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கிய இது நொடிக்கு 8 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகிறது. இது உருவானது முதல், தற்போது வரை விஞ்ஞானிகள் அங்கு சென்று, சில நாட்கள் தங்கியிருந்து ஆய்வு முடித்த பிறகு பூமிக்கு திரும்புகின்றனர்.

இங்கு 16 விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆய்வு பணியில் ஈடுபட்ட நிலையில், கடந்த வாரம் ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம், அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவின் டான் பெயிட், ரஷ்யாவின் விண்வெளி அமைப்பான ரோஸ்காசின் அலெக்ஸி ஒவ்சினின், இவான் வாக்னர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். இதன் மூலம் அங்குள்ள விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு புதிய சாதனை.

இது தொடர்பாக நாசா வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: புதன்கிழமை விண்வெளி மையத்திற்கு சென்ற வீரர்கள் மூலம், தற்போது 19 மனிதர்கள் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ளனர். இது மனித குலம் படைத்த விஞ்ஞான சாதனைகளில் புதிய மைல்கல். மனித ஆய்வின் புது எல்லைகளை விரிவுபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 17 விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தனர். இது அப்போது புதிய சாதனையாக இருந்தது. இது முறியடிக்கப்பட்டு, 19 பேர் விண்வெளி மையத்தி உள்ளனர்.

தற்போது சென்ற 3 பேருடன் அங்கு ஏற்கனவே, நாசாவின்சுனிதா வில்லியம்ஸ்,வில்மோர்,மைக்கேல் பாரட்,டிரேசி கால்ட்வெல்,மேத்யூ டோமினிக்,ஜீனிட்டே எப்ஸ் ஆகியோரும்,

ரோஸ்கோசின்நிகோலாய் சப் ஒலெஜ்,கொனேன்கோ ,அலெக்சாண்டர் கிரெபின்கின் ஆகியோரும் உள்ளனர்.

இவர்களுடன்லி குவாங்சு,லி காங்,யெ குவாங்பு,ஜெர்ட் இஸக்மன்,ஸ்காட் போடீட்,சாராஹ் கிலிஸ்மற்றும் அனா மேனன் ஆகியோரும் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like