என்டிஏ கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு..!
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மத்தியில் ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கை போதாது என்பதால், கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் என்டிஏ கூட்டனி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.இந்நிலையில் என்டிஏ கூட்டணி புதிய எம்பி-க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடமான சாம்விதான் சதனில் நடைபெற்று வருகிறது.
பார்லிமென்ட் சென்ட்ரலில் நடந்த என்டிஏ ஏபிஎல்ஏ கூட்டத்தில், என்டிஏ கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். ராஜ்நாத் சிங் பெயரை முன்மொழிய, அனைத்து எம்.பி.க்களும் ஒருமனதாக மோடியை ஆதரித்தனர்.
பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோருவார்கள். மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவுடன் மோடி கூட்டணி ஆட்சி அமைக்கிறார்.