1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்திய நெப்போலியன்..!

Q

உடல்நலக் குறைவால் டிசம்பர் 28ஆம் தேதி மறைந்த விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமானோா் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.
அமெரிக்காவில் இருந்த நெப்போலியன் தற்போது இந்தியா வந்துள்ள நிலையில், விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன் செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரின் மனைவியும் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மகன் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை நெப்போலியனிடம் காண்பித்து பிரேமலதா விவரித்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
விஜயகாந்தோடு பழகிய நாள்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது என நடிகர் நெப்போலியன் தனது இரங்கல் குறிப்பில் விஜயகாந்த் குறித்து தெரிவித்திருந்தார்.
விஜயகாந்த் மறைந்தபோது அவரால் இந்தியா வரமுடியாத நிலையில், தற்போது அவருக்கு மரியாதை செலுத்தினார் நெப்போலியன்.

Trending News

Latest News

You May Like