நாங்குநேரி சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ரூ.1,92,500 நிதியுதவி..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த பட்டியலின வகுப்பின மாணவன் மற்றும் அவனது தங்கையை ஜாதி வெறி படித்த மாணவர்கள் ஜாதி ரீதியான விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பேரலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அரிவாள் வெட்டால் படுகாயமடைந்த அண்ணன் மற்றும் தங்கை இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஜாதி வெறி கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 4 பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரிவாளால் வெட்டப்பட்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சின்னத்துறையின் தாயிடம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் ரூ.1,92,500 நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். மேலும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.