1. Home
  2. தமிழ்நாடு

வெளியே தெரியும் நந்தி சிலை..!

1

மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி, நீர் பரப்பு 152 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரியும். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது.

பிப்ரவரி 4-ம் தேதி 70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், பிப்ரவரி 5-ம் தேதி 69 அடியாக குறைந்ததால் நந்தி சிலையின் தலை பகுதி வெளியே தெரிய தொடங்கியது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியில் இருந்து 49 அடியாக சரிந்தது . இதனால் பண்ணவாடி நீர் தேக்க பகுதியில் மூழ்கி இருந்த 20 அடி உயரம் கொண்ட நந்தி சிலை அதன் பின்புறம் 10 அடி உயரம் கொண்ட ஜலகண்டேஸ்வர ஆலயத்தில் கோபுர முகப்புப் பகுதி வெளியே தெரிந்தது.

நேற்றைய நிலவரபடி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.05 அடியாகவும், நீர் இருப்பு 17.21 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like