இன்ஸ்டாவில் பெயர் மாற்றம்! விவாகரத்து செய்கிறாரா நடிகை சங்கீதா..?
கங்கோத்ரி எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் சங்கீதா. 90களிலும், 2000 காலக்கடத்தின் ஆரம்பத்திலும் ப்ரைம் ஹீரோயினாக இருந்தார். பிதாமகன் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.
சங்கீதா ஒரு விருது விழாவில், பிரபல பின்னணி பாடகர் கிரிஷை சந்தித்தார். சில மாதங்கள் டேட்டிங் செய்த இவர்கள் பின்பு 2009ஆம் ஆண்டு திருவண்ணாமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் இருக்கும் இணைபிரியா காதல் ஜோடிகளாக இவர்கள் இருப்பதாக ரசிகர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை ஏன் எழுந்தது தெரியுமா?
சங்கீதா, எப்போதாவது செலக்ட் செய்து படங்களில் நடித்தாலும், சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார். இதனால், தனது சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் பெயரை சமீபத்தில் மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னர், “Sangeetha Krish" என்று வைத்திருந்ததாகவும், இப்போது "Sangeetha.act" என்று மாற்றியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில்தான் கடைசியாக அவர் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதன் பிறகு, அவருடனான புகைப்படங்கள் எதுவுமே இல்லை.
சங்கீதாவும் கிரிஷும் இன்னும் இருவரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்துதான் வருகின்றனர். அது மட்டுமன்றி, இருவரும் ஒன்றாக இருக்கும் தங்களின் புகைப்படங்களையும், வீடியாேக்களையும் இன்னும் நீக்கவில்லை. சங்கீதாவும், தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இன்னும் இன்ஸ்டா ஹைலைட்டாக வைத்திருக்கிறார். இதை பார்க்கையில் இருவரும் ஒன்றாக இருப்பது போல தெரிவதாக ரசிகர்கள் சிலர் கூறி வருகிறனர். இருப்பினும் சில ரசிகர்கள் இது குறித்த சந்தேக அலைகளை ஆதரித்து வருகின்றனர். சங்கீதா-கிரிஷ் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் சில கிசுகிசுக்கள் பரவி வருகிறதே தவிர, அவர்கள் இருவரும் இது குறித்து இன்னும் எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.