சோமேட்டோ, ஸ்விக்கிக்கு செக் வைத்த நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள்..! இனி இந்த செயலி-யில் தான் உணவு டெலிவரி..!
உணவு டெலிவரிக்கு செக் வைக்கும் விதமாக அதிரடி முடிவு ஒன்றை நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் எடுத்துள்ளனர். அதாவது, உணவு டெலிவரிக்கு இனி ZAAROZ - என்ற புதிய செயலியை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இனி ஆன்லைன் உணவு விநியோகத்திற்கு இந்த செயலியை பயன்படுத்தப் போவதாக உணவகங்கள் அறிவித்துள்ளன.
இந்த செயலி ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பதாகவும் சேலம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த செயலி டெலிவரி சேவைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய உணவு டெலிவரி நிறுவனங்கள் ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு விதமாக கமிஷன் பிடிப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, 10,000 ரூபாய் மதிப்புள்ள உணவு வியாபாரத்தில், 4,000 ரூபாய் வரை கமிஷனாக பிடித்துக் கொள்வதாகவும் அதுபோக விளம்பர கட்டணம் என்று தனியாக பிடித்தம் செய்வதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.ஒரே மாதிரியான கமிஷன் தொகை வசூலிப்பது இல்லை, கூடுதல் கமிஷன் தொகை என பல்வேறு காரணங்களை முன்வைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்து இருந்தனர்.