அதிர்ச்சி! அரசு மருத்துவக் கல்லூரி சரிந்து விழுந்து 8 பேர் காயம்!

நாமக்கல் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானது.
நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது, இம்மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது.நாமக்கல்லில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் ஆகியோரின் முயற்சியால், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்தது.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 38 ஏக்கர் நிலத்தை மாவட்ட கலெக்டர் மெகராஜ் ஒதுக்கியுள்ளார். 338.76 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதற்கான விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, குடியிருப்புகள் பகுதி உள்ளிட்டவை தனித்தனியாக கட்டப்பட்டு வருகிறது.
மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி, பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானது.
கட்டிட விபத்தில் ஈடுபட்டிருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல அதிமுகவினரும் அந்த பகுதியில் குவிந்துள்ளனர்.
புதிய கட்டடம் சரிந்து விழுந்தது அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.