மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் ‘சென்னை போட்டோ பியனாலே’!ஆன்லைனில் கலக்கும் மாணவர்கள்!

இந்த கொரோனா கால ஊரடங்கு பலரும் அவர்களது இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. பள்ளிகள் இயங்காத இந்த காலகட்டத்திலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதில் chennaiphotobiennale ஒரு படி முன்னேச் சென்று மாணவர்களின் கற்றல் திறனையும், சமயோசித அறிவையும், எண்ணங்களையும் மேம்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது.
7 வாரங்கள் கொண்ட இந்த வகுப்புகளில், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கலந்துக் கொண்ட மாணவர்கள் நாளை, அவர்கள் கற்றறிந்த புது விஷயங்களை வெளிப்படுத்த இருக்கிறார்கள்.
இந்த டிஜிட்டல் முறையிலான கண்காட்சி நாளை ( செப்டம்பர் 26) சனிக்கிழமையன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடக்கவிருக்கிறது.
chennaiphotobiennale நடத்தும் இந்நிகழ்வில், ‘நலந்தா வே பவுண்டேஷன், மற்றும் அகஸ்தியா பவுண்டேஷன் மாணவர்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்த இருக்கின்றனர். வீடு என்கிற சொல்லும் மாணவர்கள், ஒவ்வொருவரும் அவர்கள் புரிந்துக் கொண்ட அர்த்தங்களைப் படைக்க இருக்கிறார்கள். புகைப்படங்களாக அவர்கள் வெளிப்படுத்த இருக்கும் இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக சென்னையை சேர்ந்த பிரபல ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர் குருநாதன் பங்கு பெறுகிறார்.