நண்பனை நம்பி நிர்வாண வீடியோ கால்..5 லட்சம் பணம் இழந்த இளம்பெண்..!
சென்னையில் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.தான் மும்பையில் எம்எஸ்சி வேதியியல் படித்து வருவதாகவும், விடுமுறை நாட்களில் வளசரவாக்கில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி இருந்ததாகவும்கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த சுஜித் என்ற வாலிபர் தனக்கு அறிமுகமானார் என்றும், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் வீடியோ அழைப்பில் நிர்வாணமாக தோன்றும்படி அடிக்கடி கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால், கத்தியால் கையை வெட்டி கொள்வதாகவும் சுஜித் கூறியுள்ளார். இதனால் இரண்டு முறை நிர்வாணமாக வீடியோ எடுத்ததாகவும், அதன் பிறகு அந்த வீடியோவை வைத்து மிரட்டி அவ்வப்போது பணம் கேட்டு மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை மிரட்டி பல தவணைகளாக ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் சுஜித் .இந்நிலையில் தற்போது மேலும் 50,000 ரூபாய் கேட்டுள்ளார் தராவிட்டால் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.