1. Home
  2. தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் புது விளக்கம்..! ”ஆளை தெரியும் ஆனால் ரூ.4 கோடி பற்றி தெரியாது" ..!

1

கடந்த 6-ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரயிலில் 3 பேர் 3.99 கோடி ரூபாயை உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதோடு நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இவர்கள் தான் பணத்தை தந்து நெல்லைக்கு கொண்டு செல்லும்படி கூறியதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “மே 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க என்னை குறிவைத்து செயல்படுகின்றனர். இதனை அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன். தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் கைப்பற்றியுள்ளார்கள். ஆனால், ரூ.4 கோடியை யாரோ எங்கோ கொண்டு சென்றதில் எனது பெயரையும் சேர்த்து சூழ்ச்சி செய்கின்றனர்.

இது என்னுடைய பணம் அல்ல. அந்தப் பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்கு தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள் தான்.

இந்த வழக்கில் கடந்த 22-ம் தேதி (தேர்தலுக்கு பிறகு) ஆஜராகி விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாட்கள் அவருக்கு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட தாம்பரம் காவல் துறையினர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு மே 2-ம் தேதி ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பி உள்ளனர்.

Trending News

Latest News

You May Like