1. Home
  2. தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி விசிட்.. அப்போ இவர் தானா..?

1

பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் நியமனம் முடிந்துவிட்டது. மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் மட்டும் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளது. மாநில நிர்வாகிகள் குறித்த பட்டியல் கட்சியின் தேசிய தலைமைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய தலைவர் யார் என்றும் நான் கைகாட்ட போவதில்லை என்று அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. புதிய தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், பொன் ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம் உள்ளிட்டோர் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. பாஜக தலைவர் நியமனம் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் நயினார் நாகேந்திரன் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே புதிய தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன் முதலில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

பாஜக தலைவருக்கான போட்டியில் வானதி சீனிவாசன் பெயரும் அடிபடுகிறது. தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ வாக இருக்கும் வானதி சீனிவாசன், கடந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர். அரசியல் நுணுக்கம் கொண்டவராக வானதி சீனிவாசன் கருதப்படுவதால் அவரது பெயரும் அடிபடுகிறது. எது எப்படியோ இந்த சஸ்பென்ஸ்க்கு இன்னும் ஒரு சில நாட்களில் முழுவதுமாக விடை கிடைத்துவிடும்.

Trending News

Latest News

You May Like