1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: தமிழக பா.ஜ தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்..!

Q

பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடக்கிறது.
போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை விருப்ப மனுவை, மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, பொன் பாலகணபதி உள்ளிட்டோர் பரிந்துரை செய்து கையெழுத்திட்டனர்.
விருப்ப மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரனுக்கு பா.ஜ., மூத்த தலைவர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய கட்சித் தலைமை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருப்ப மனு தாக்கல் செய்த ஒரே நபரான நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க.வின் 13-வது தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Trending News

Latest News

You May Like