ஒருதலைப்பட்சமான ஆட்சி நடத்துகிறது திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் முருக பக்தர்கள் மாநாட்டுக்குத் தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
முதலமைச்சர் என்பவர் அனைவருக்கும் சமமாக நடக்க வேண்டும் என்றும் ஒருதலைப்பட்சமான ஆட்சி நடத்துகிறது திமுக என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்றும் விஜய்யின் அரசியல் வருகைக்கும், பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.