மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க நயினார் வேண்டுகோள்..!
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இத்தகைய தருணத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், எத்தகைய அசம்பாவிதமும் நேராமல் இருக்க போர்க்கால அடிப்படையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். அதே நேரம், தமிழக மக்களின் துயர் துடைத்துத் தோள்கொடுக்கும் விதமாக நமது பா.ஜ.க. சொந்தங்கள் களத்தில் முன்னின்று மக்களைப் பாதிப்பிலிருந்து காக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.