1. Home
  2. தமிழ்நாடு

எம்.பி. செல்வராஜ் மறைவு - முத்தரசன் இரங்கல்..!

Q

சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான செல்வராசு (67) உடல்நலக்குறைவால் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயத்தில் பிரச்சனைகள் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

 

இவர் 1989, 1996, 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில் எம்பியாக தேர்வானார். நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, நான்கு முறை இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

உடல்நலக்குறைவு காரணமாக இந்த லோக்சபா தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. இவருக்கு பதில் சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இங்கே களமிறங்கினார். செல்வராஜுக்கு ஆதரவாக செல்வராசு கடந்த மாதம் பிரச்சாரம் செய்து வந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி அஞ்சலி தெரிவிக்கிறது" எனவும் செல்வராஜை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்குஆறுதல் தெரிவிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like