1. Home
  2. தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சியின் புதிய உத்தி..!

11

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் 20 பெண்களையும் 20 ஆண்களையும் வேட்பாளராக களமிறக்கி நான்காவது பொதுத் தேர்தலை கூட்டணியின்றி தனித்து சந்திக்கிறது நாம் தமிழர் கட்சி. 2019 மற்றும் 2021 தேர்தல்களை கரும்பு விவசாயி சின்னத்துடன் சந்தித்த நிலையில், அச்சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கியிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் சின்னத்தை `பாரதிய பிரஜா ஆகியத்தா’ என்ற கட்சிக்கு கொடுத்தோம் என்கிறது தேர்தல் ஆணையம்.

6.87 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் நிலையில் லெட்டர் பேட் கட்சிக்கு எங்கள் சின்னத்தை ஒதுக்குவதா... எங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்’ என டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையிலும், அது பலன்கொடுக்கவில்லை. தற்சமயம் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடும் செய்திருக்கிறார்கள்.

பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கையால் சின்னம் பறிபோயிருக்கிறது என நம்புகிறார்கள் நா.த.க-வினர். மேலும் இனிமேலும் விவசாயி சின்னம் கிடைக்குமென காத்திருப்பதில் பிரயோஜனமில்லை என்ற நிலைக்கு நகர்ந்திருக்கிறது நா.த.க. இதற்கிடையில் சின்னம் பறிபோன விவகாரம் சீமான் முதல் கட்சியில் அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் உஷ்ணப்படுத்தியிருக்கிறது. `எங்களையா முடக்கப் பார்க்கிறீர்கள்?’ என வெடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


 

Trending News

Latest News

You May Like