8 கோடி மக்களை நம்பி நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி - சீமான்!
விஜய் என் சகோதரன். அன்பு, பாசத்தில் துளி அளவும் குறையவில்லை. கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் தான் நிறைய முரண்பாடு வருகிறது” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம். கொள்கையை விட்டுவிட்டு கூட்டணிக்கு எப்படி செல்வீர்கள்? மக்களோடு மட்டும்தான் கூட்டணி. நாங்கள் மக்களை முழுவதுமாக நம்புகிறோம். மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். 8 கோடி மக்களை நம்பி நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி. நேர்மையற்ற ஆட்சியாளர்களாகிய இவர்களுக்கு மக்களையும் நேர்மையற்றவர்களாக மாற்றும் வேலை இருக்கிறது.
அதனால் நாங்கள் கூட்டணி சென்றால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் அற்று போய்விடுவோம். அதனால் நாங்கள் கூட்டணி செல்வதில்லை. எந்தக் கட்சிகளோடு சேர்ந்து மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பீர்கள். மாணவர் மனசு புகார் பெட்டி ? மாணவர்களின் பிரச்னை என்ன என்றே தெரியாமல் தான் அதிகாரத்தில் இருக்கிறீர்களா. தனித்து நின்று வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வர முடியாது எனச் சொன்னது யார்?
கடந்த காலம் இல்லை என்றால் நிகழ்காலம் இல்லை. நிகழ்காலம் இல்லாதவர்களுக்கு எதிர்காலம் இல்லை. முன்னாடி கட்சி துவங்கியது நான் தான். அவங்கள் அதிகாரத்தில் இருப்பதால் ஊடகத்தில் பளிச் என்று வருகிறார்கள். இதனால் மக்களுக்குத் தெரிகிறது. ரொம்ப நாட்களுக்கு முன்பே கட்சி துவங்கி விட்டேன். என்னுடைய பலவீனம், வலிமை எனக்குத் தெரியும். என்னிடம் காசு இல்லை. எனக்காகப் பேசும் ஊடகங்கள் இல்லை. இதனால் நாங்களே தான் பேச வேண்டும்.
நாங்கள் வேகமாக ஓடுவோம். நான் தடுமாற்றம் இல்லாத காரணத்தினால் இப்படி இருக்கிறேன். த.வெ.க., தலைவர் விஜய் என் சகோதரன். அன்பு, பாசத்தில் துளி அளவும் குறையவில்லை. கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் தான் நிறைய முரண்பாடு வருகிறது. தி.மு.க., இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி, நான் அவர்கள் கொள்கையை எதிர்க்கவில்லையா? வேற்றுமை உள்ளது. தாமிரபரணி ஆறு நஞ்சாக மாறிவிட்டது. இது யாருடைய ஆட்சியில் மாறியது? இவ்வாறு சீமான் கூறினார்.