1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை..!

1

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு முன்பு திரண்ட இயக்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் தமிழகத்தில் கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அவருடைய ரசிகர்கள் பட்டாசுகளையும் வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் விஜய் மக்கள் இயக்க கொடியை பிடித்துக் கொண்டு கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் கேட்ட போது,விஜய் எந்த கோட்பாடோடு அரசியலுக்கு வருகிறார் என்பது தெரியாது. தொடங்குதல் எளிது. தொடர்வது கடினம். இதுதான் விஜய்க்கு நான் சொல்லும் அறிவுரை. மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். அதை விஜய் செய்வார் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.


 

Trending News

Latest News

You May Like