1. Home
  2. தமிழ்நாடு

திமுகவில் இணைந்த நாம் தமிழர் கோவை மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன்..!

1

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ராமச்சந்திரன், நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த ராமச்சந்திரன், நிர்வாகிகளுடன் செய்தியாளர்களிடம் பேசினார்.

“இரு நாள்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாங்கள் சரியான தலைமை உள்ள கட்சியில் இணைய வேண்டும் என முடிவெடுத்தோம். அதன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்குச் சரியான, வலுவான தலைமை உள்ள திமுகவில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.

“தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது. அது தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. அதன் காரணமாக நாங்கள் திமுகவில் இணைந்துள்ளோம். நாம் தமிழர் கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் விரைவில் திமுகவில் இணைவார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like