"N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை" : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாம் பயன்படுத்தும் N95 முக்கவசங்கள் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், குறிப்பாக முக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து நாடுகளும், மாநிலங்களும், மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் அப்படி அணியும் முகக்கவசத்திலும் ஆபத்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின், சுகாதார சேவைகளின் பொது இயக்குநர் ராஜூவ் கர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், சுவாச வால்வுகள் பொருத்தப்பட்ட மாஸ்க் அணிவதால், வைரஸ் எளிதில் வெளியேறும் என்றும், அதனால் கிருமியை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அதனால் அனைவரும் பொருத்தமான முகக்கவசங்களை அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க்களை அணியலாம் என ராஜூவ் கர்க் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற நடைமுறை நாடு முழுவதும் உள்ளது. அதே போல், எப்படி மாஸ்க் அணிய வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வால்வ் வைத்த என்95 முக்கவசங்களை அணிய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
newstm.in