முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா..!

மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் இரு பிரிவு மக்கள் இடையே கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தை ஒடுக்குவதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அண்மையில், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி அதற்காக மன்னிப்பும் கேட்டு இருந்தார் மாநில முதல்வர் பிரேன் சிங். வன்முறையை தூண்டும் விதமாக முதல்வர் பிரேன் சிங் பேசியதாக ஆடியோ குறித்து, விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
அதே நேரம், நேற்று அம்மாநிலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரேன் சிங். மணிப்பூரில் கலவரத்தை ஒடுக்கி, அமைதியை நிலைநாட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக கூறி இருந்தார்.
இந் நிலையில், முதல்வர் பிரேன் சிங் திடீரென தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னர் அஜய் குமார் பல்லாவிடம் நேரில் வழங்கி உள்ளார்.