MYV3ADS சொத்துக்களை விற்கிறார்கள்... பாமக பிரமுகர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..!
பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி வீடியா ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் MYV3ADS சொத்துக்களை விற்கிறார்கள் என்று எத்தனை முறை சொல்லி விட்டோம்... கார் வாங்கிய வெறும் 3மாதத்தில்ல் விற்க பார்கிறார்கள், 62 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய காரை இப்போது 45 லட்சத்திற்கு விற்க முயற்சிக்கிறார்கள், இது மக்களுடைய பணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டிய பணம். இதன் மூலம் 60 பேருக்கு பணத்தை திரும்ப தரமுடியும் என்று கூறியுள்ளார்.
சக்தியானந்தன் என்பவர் கோவையில் My v3 Ads என்ற ஆப்பை நடத்தி வருவதுடன் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இந்த My v3 Ads யூடியூப் சேனலில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என சக்தியானந்தன் விளம்பரம் செய்திருந்தார். இவர்களின் விளம்பரத்தில், 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்றும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் பணம் செலுத்தும் நபர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலத்தவரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில் இதில் பணம் வழங்கப்படவில்லை என்றும் மோசடி நடைபெறவதாவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு குறித்து 2 மாதம் முன்பு அறிக்கை வெளியிட்ட கோவை மாநகர காவல்துறை, MyV3Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்றப் பிரிவில், 2024 ஜனவரி மாதம் Prize Chits and Money Circulation Schemes (Banning) Act 1978, The Banning of unregulated deposit Schemes Act 2019 2 சட்டப்பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சக்தியானந்தன் அண்மையில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் கோவை மை வி 3 ஆட்ஸ் நிறுவனம் சொத்துக்களை எல்லாம் விற்று பணமாக மாற்றி பதுக்க முயற்சிப்பதாக பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி புதிதாக வீடியா ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், கோவை மை வி2 ஆட்ஸ் நிறுவனம் குறித்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இந்த சூழலில் 2 மாதம் முன்பே குருஜி என்று சொல்லப்படுகிற விஜயராகவன் மதுரையில் 100 கோடிக்கு சொத்து வாங்கி உள்ளார். இதுபற்றி ஆவணங்களை நாங்கள் ரிலீஸ் செய்திருந்தோம்.. அந்த இடங்களுடைய பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை ரிலீஸ் செய்திருந்தோம்.. இப்போது இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்தது.
இதையடுத்து பெயில் ரத்து செய்யப்பட்டு சக்தியானந்தன் சரண்டர் ஆகி உள்ளார். இதை எல்லாம் தெரிந்து சொத்துக்களை விற்க முயற்சிக்கிறார்கள்.. இந்த பணத்தை பதுக்க வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். 3 மாதம் முன்பு பார்சுனர் கார் ஒன்று 65 லட்சத்துக்கு வாங்கியிருந்தார்கள்.. 10000 கிலோ மீட்டர் கூட ஓடாத அந்த காரை 45 லட்சத்திற்கு விற்க முயற்சிக்கிறார்கள்.. 15லட்சத்தை மை வி3 ஆட்ஸ் அக்கவுண்டில் கட்ட வேண்டும்.. மீதியை பணமாக கொடுக்க வேண்டும் என்கிறார்கள்..
இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். இந்த 60 லட்சம் காரை ஏன் விற்க முயற்சி செய்கிறார்கள் என்றால், இந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இவங்களுடைய அக்கவுண்டை முடக்குவார்கள், சொத்துக்களை கண்டிப்பாக பறிமுதல் செய்வார்கள்.. எனவே பணமாக இருந்தால் பதுக்கிவிடலாம் என்பதற்காக பண்ணிக்கிட்டு இருக்காங்க.. ஆனால் சரியாக நடவடிக்கை எடுத்தால் 60 லட்சத்தை மீட்டெடுக்க முடியும்.. இதை மீட்டுத்தால் 60 பேருக்கு பணத்தை திரும்ப தர முடியும்" இவ்வாறு அசோக் ஸ்ரீநிதி கூறினார்.
MYV3ADS Scam update:
— Ashok Srinithi (@AshokSrinithi) July 12, 2024
எத்தனை முறை சொல்லி விட்டோம், MYV3ADS சொத்துக்களை விக்கிறாங்க... சொத்துக்களை விக்கிறாங்கன்னு!!
3வது மாசம் 62 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, இப்போது 45 லட்சத்திற்கு விற்க முயற்சிக்கிறார்கள்!!
இது மக்களுடைய பணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டிய பணம். pic.twitter.com/XuM0mrQSh6
.png)