ஏர் இந்தியா விமானத்தில் மர்மமான முறையில் இறந்த பயணி!!

மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பை செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் மதுரையை சோ்ந்த ஒரு பயணி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து மும்பை செல்லவேண்டிய ஏா் இந்தியா விமானத்தில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. மதுரையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 93 பயணிகள் இருந்தனா்.
நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கிய விமானத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் தரையிறங்கினா். ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்கவில்லை. ஏா் இந்தியா ஊழியா்கள் பார்த்தபோது, மதுரையை சோ்ந்த சண்முக சுந்தரம் (72) என்ற பயணி இருக்கையில் சாய்ந்து தூங்குவதுபோல் இருந்தார்.
இதையடுத்து விமானநிலைய மருத்துவ குழுவினா் பரிசோதித்தபோது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது. உடனடியாக சென்னை விமான நிலைய போலிஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து உடலை விமானத்திலிருந்து கீழே இறக்கி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா். இதனையடுத்து மும்பைக்கு விமானத்தை இயக்க விமானி மறுத்துவிட்டார். இதையடுத்து விமானம் முழுமையாக கிருமிநாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின்பு 115 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனா்.
newstm.in