திருமணம் ஆன நாளில் இருந்தே என் மனைவி டெய்லி நாலு பெக் போடுறா - கதறும் புதுமாப்பிள்ளை..!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ ஜான்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன நிலையில், தனது மனைவி தினமும் அளவுக்கு அதிகமாக குடிப்பதால் அவளை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க காவல் நிலையத்தின் உதவியை நாடியுள்ளார்.
உள்ளூர் காவல் நிலையத்தில் குடும்ப ஆலோசனை மையம் வழங்கிய ஆலோசனையின் போது இந்த பிரச்சனை வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. எனினும், தம்பதிகளின் அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக திருமணமான இந்த ஜோடி சந்தோஷமாக வாழ்க்கையைத் துவங்கியுள்ளனர். முதலிரவில் மனைவி குடித்திருப்பதை அறிந்த கணவன் அதிர்ச்சியடைந்தாலும், சரி.. திருமண சந்தோஷம்.. தோழிகளுடன் பார்ட்டி என்று குடித்திருப்பார் என்று மனதை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்துள்ளார்.
ஆனால் அதன் பின்னர் தினந்தோறும் தனது மனைவி மது அருந்துவது தெரிந்து தன் வாழ்க்கை நரகமாக மாறுவதாக உணர்ந்துள்ளார். இது குறித்து இருவரும் எவ்வளவோ பேசிய நிலையில், ஒரு கட்டத்தில் தனது கணவனையும் குடிக்கச் சொல்லி வற்புறுத்த துவங்கியிருக்கிறார் அவரது மனைவி.
திருமணத்திற்குப் பிறகும் குடி பழக்கத்தை அவரது மனைவியால் விட முடியவில்லை. தனக்கு குடிப்பழக்கத்தில் ஆர்வம் இல்லை என்றும், தன்னுடைய மனைவி தன்னுடன் சேர்ந்து குடிக்குமாறு அடிக்கடி அழுத்தம் கொடுத்ததாகவும், இதை சமாளிக்க முடியாமல், மனைவியை மீண்டும் அவளது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் கூறியிருக்கிறான்.
ஆனால், தன்னுடைய கணவர் தன்னைக் கைவிட்டதாகக் கூறி அந்தப் பெண் முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பிறகு தம்பதியரை வரவழைத்த போலீசார், தம்பதிக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது குடும்ப நல கவுன்சிலிங்கின் போது, மனைவி தினமும் மது அருந்துவதாகவும், அதையே கட்டாயப்படுத்துவதாகவும் கணவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் ஒரே அமர்வில் மூன்று முதல் நான்கு பானங்களை உட்கொள்வார் என்று கூறினார். அமர்வின் போது மனைவி, தனது குடிப்பழக்கத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது கணவரின் அறிக்கைகளை உறுதிப்படுத்தினார். அமர்வுக்குப் பிறகு, இரு தரப்பினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடிவு செய்து, மீண்டும் ஒன்றாக வாழ ஒப்புக்கொண்டு திரும்பி சென்றுள்ளனர்.